பல்சுவை ஹைக்கூ

👁️கூ கவிதைகள்👁️


கவிதை எழுதும் ஆசையில்
உன்னை காதலித்தேன்
தமிழ் எழுத்துக்கள்.

காதல் செய்
கவிதை படை
கவிஞ்னாகு.

உணவுக்கு பஞ்சமில்லா நாடு
உழைக்க ஏன் போக வேண்டும் வெளிநாடு
விவசாயின் தவபுதல்வன்.

மனக்கோயிலில் நிம்மதி துலைத்துவிட்டு
தெருக்கோயிலில் சென்று தேடுகிறார்
புசாரிக்கு பணம் கொத்து.

உழைத்து உழைத்து ஓடாக தேயிகிறது
வானத்து வெண்ணிலவு
பெளர்ணமி மறுநாளிலிருந்து.

நிறுவனத்தில் இரவும் பகலும் உழைத்தாலும்
நிலுவையில் தான் உள்ளது
வட்டியும் கடனும்.

சூரியன் மறைந்த பின்னே
நிலா வருகிறது
வீட்டில் வெளிச்சம் காணவில்லை.

இளமையில் கல்
மரம் நடு விழாவில்
பனைமரம் முதல் இடம்.

சாலையில் வாகனங்கள்
புகைபித்து கொண்டே போகிறது
ஒசோனில் ஓட்டை.

மாடியில் காகம் கரைய
வாழைமரம் இலையை இழக்கிறது
விருந்தினர் பக்கத்தில்.

இயற்கை வளம் அழிந்த பின்
நாடு வல்லரசாகிறது
உயிர் வாழ்வதற்கு.

இயற்கை கொன்று
வின்ஞானம் வென்று
நாடு போகிறது அழிவை நோக்கி.

கண்ணாடிக்குள் மாட்டிகொண்டது தெரியாமல்
ஓடிகொண்டே இருக்கிறது
கடிகார முள்.

🙏நன்றி🙏

எழுதியவர் : சக்திவேல் மணி (23-Jun-22, 9:27 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : palsuvai haikkoo
பார்வை : 72

மேலே