அவள் அழகு
அவள் இதழ்கள் சிவப்பு மாதுளை பூப்போல
அவள் இதழ்கள் அலர்ந்து சிரித்தாள் மல்லிகைப்பூப்போல
அவள் வண்ண வண்ண முகமோ பூரணநிலவுபோல
அதில் பிறைபோல் மின்னும் அவள் நெற்றி காந்தல்போல
அவள் கண்களிரண்டும் துள்ளும் இருகயல்போல
அவள் கழுத்தின் அழகு வெள்ளை வலம்புரிசங்குபோல
பொங்கும் எழிலொன்று அவளணிந்த பட்டுசேலையின் பின்னால
மறைவில்தான் சில அழகும் அழகாகும் என்பதுபோல
உள்ளடங்கிய வயிற்றின் கீழே அவள் இடைஅழகு
சிற்றிடையா இல்லை சீந்தில் கொடியா இதுஎன்பதுபோல
பெண்ணிவள் கால்களிரண்டும் வாழைத்தண்டுபோல
அவள் சிவந்த பாதமிரண்டும் என்றும் மலரும் தாமரைபூபோல
அசைந்து அசைந்து வருகையில் அவள் சின்னையானைபோல
ஆடி வரும்போது அவள் கோலா மயில்போல