காமனின் அம்புகள்

கண்ணாடி முன்னால்
நின்றேன்
உடம்பில்
அங்குமிங்கும் இருந்த
சிறு சிறு கீறல்களை
தடவி பார்த்து ரசித்தேன்...
மனதில் மெல்ல
சிரித்துக் கொண்டேன்..!!

நேற்றிரவு கட்டிலில்
கட்டியவனுடன்
இணைந்து
காமனை வெல்லும்
வன்முறை போராட்டத்தில்
காம அம்புகள் தாக்கிய
காயங்கள்தான் அத்தனையும்
என்றெண்ணி மனதுக்குள்
மீண்டும் மகிழ்ச்சி கொண்டேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jun-22, 10:50 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 247

மேலே