விழியில் விழுந்து எழுந்த காதல்

விழியில் விழுந்து...
🌹🌹🌹🌹🌹🌹🌹

விழியில் விழுந்து
விண்ணில் எழும்பும்
வழியில்
வான வில்லாய்
வளையும் !

இதயம் பதைக்கும்
இரத்தம் துடிக்கும்
உதயமான
உறவில் உள்ளம்
சிலிர்க்கும் !

இரண்டு உள்ளம்
இணையும் நேரம்
திரண்டு
நிற்கும் தோள்கள்
சேரும் !

அன்பும் ஒன்றே
ஆசை நன்றே
என்றும்
வாழ்வில் ஏற்றம்
உண்டே !

கண்கள் இரண்டும்
கவரும் வேளை
பெண்கள் ஆண்கள்
பேதம் எங்கே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (4-Jul-22, 6:35 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 125

மேலே