மரம்னு பேரா
உலகத் தமிழர் எவரும்
தான் பெற்ற பிள்ளைக்கு
வைக்காத இந்திப் பெயரை என்
பெண் குழந்தைக்குச் சூட்டினேன்.
என் செல்வத்தின் பெயர் 'பியா' கேட்டவர் எல்லாம் "ஸ்வீட் நேம்
ஸ்வீட் நேம்" என்று கொஞ்சி மகிழ்ந்தனர்
பெருமிதம் கொண்டு பூரித்துப் போனேன்.
உடன் பணியாற்றும் தோழி
"உன் குழந்தையின் பெயர் என்ன?"
என்றெனைக் கேட்டாள்; நானும்
"பியா" என்று பெருமையுடன் கூறினேன்.
கேட்டவள் "ஸ்வீட் நேம்" என்பாள் என்று
எதிர்பார்த்த எனக்கு கிடைத்தது ஏமாற்றம்
சிரித்தாள் தோழி குலுங்கிக் குலுங்கி
புரியாது விழித்த நான் "என்னடி?" என்றேன்.
அடியே ஷாஷா "உன் மகள் மரமா?"
வினவினாள் என் தோழி அமுதமொழி
இந்தி படித்த நான் சொல்கிறேன் கேளடி
"'பியா' என்றால் இந்தியில் மரம்".
அய்யய்யோ என் மகள் பெயர் மரமா?
பியாவின் பொருள் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரிந்தால்
கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகுமே!
இந்திப் பெயர் மோகத்தை
இன்றோடு கைவிட்டு தமிழச்சி
நானென்று உலகறியச் செய்ய
என் பெயரும் தமிழ்ப் பெயராகுமினி.
நான் பெற்ற செல்லக் குழந்தைக்கு
'தமிழ்கனி' என்ற பெயர் இந்நொடியே. அடியே அமுதமொழி என்னருமைத் தோழி
தமிழுணர்வு ஊட்டியெனைத் திருத்திவிட்டாயடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Piya = tree
Shasha = Moon God, Chandra