தயக்கத்துடன் கண்ணீர்
தயக்கத்துடன் கண்ணீர்..
⚘⚘⚘⚘⚘⚘⚘
தாயுன்றன் நினைவுகள் தகித்திடும் எண்ணங்கள் /
சேயென்றன் நெஞ்சிலே சிதறாத வண்ணங்கள் /
மாதங்கள் பத்திலும் மங்கையுன் வயிற்றிலே /
பாதகன் வாழ்வெலாம் படுத்தினேன் வீணிலே /
இளமையில் கற்றாலும் இன்பணி ஏற்றாலும் /
வளமையில் தாயுனை வருத்தினேன் வஞ்சகன்.
ஓய்ந்தவன் தேடினேன் உத்தம அன்னையை /
ஓயாது உழைத்தநீ மாயமாய்ப் போகினாய் /
தயக்கமாய்க் கண்ணீரும் ததும்பிடும் விழிகளில் /
மயக்கமும் தெளிந்திட மனமுன்னைத் தேடிடும் !
-யாதுமறியான்.