தாயின் கருவறை

இருஉயிர்களின் உறவில் உயிர்பெற்று
கருவாய் உயிர் பெற்று
என் தாயே !!!
உன் கருணையில் உருப்பெற்று
உன் எண்ணங்களை பல வண்ணமாய்
மென்மையாய் எண்ணில் புகுத்தி
புத்துயிர்யளித்து
உன்னில் என்னை முழுமையாக்கி
நித்தம் உன் அன்பில்
நான் உணர்ந்த உணர்வுகளை இனி
மீண்டும் உணர முடியாத ஓர் இடம்
தாயே !!!உன் கருவறை .

எழுதியவர் : ஞானசௌந்தரி (10-Jul-22, 12:13 pm)
Tanglish : thaayin karuvarai
பார்வை : 482

மேலே