ஆணிமுத்துப் போன்றவளாம் - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
ஆணிமுத்துப் போன்றவளாம் அன்னநடை கொண்டவளாம்;
காணிநிலம் சொந்தமுடன் கண்ணான பெண்ணவளாம்!
வேணுகானங் கற்றவளாம் வேண்டிய நற்குணத்தாள்
பாணர் குலத்தவளாம் பாடுவதில் வல்லவளாம்!
- வ.க.கன்னியப்பன்