பேசும் சிலையே
கண்ணே என் கண்மணியே
காதல் கனிரசம் கொண்டு
உன்னை நித்தமும்
அபிஷேகம் செய்கிறேன்...!!
நீ கற்சிலையல்ல
பேசும் பொற்சிலைதான்
நான் செய்யும் அபிஷேகத்தை
உன் கண் திறந்து
பார்த்துக்கொண்டு தான்
இருக்கின்றாய்...!!
ஆனால்
திருவாய் மலர்ந்து
வரம் தருவதற்கு மட்டும்
நீ சிலையாக மாறி
மௌனம் காக்கின்றாய்
கண்ணே கலைமானே
உன் மௌனம் கலையுமென்று
காத்து நிற்கும் பக்தன் நான்...!!
--கோவை சுபா