அன்புக்கு ஒரு கவிதை

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

*அன்புக்கு ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


*அன்பு......♥*

மனதை
அழகாக்கும் ஒப்பனை....!!

காதல் தேசத்தின்
தாய்மொழி.... !!

மனிதத்தின்
முகவரி..... !!

நட்பு பறவைகளின்
சரணாலயம்....!!

மூன்று
புனித மத நூல்களையும்
ஒன்றாக உருக்கி
எழுதிய
இன்னொரு புனிதநூல்.....!!

இதயக் கோவிலில்
வீற்றிருக்கும்
கடவுள்.......!!

பண்புகளின்
படைத்தளபதி....
குணங்களின்
குழுவின் தலைவன் .....!!

உலக மக்களை
இணைக்கும்
ஒரே மொழி .....!!

அன்னையிடம்
விருந்தாக இருக்கும்..
தந்தையிடம்
மருந்தாக இருக்கும்...

நல்லவர் என்ற
பட்டத்தை வழங்கும்
பல்கலைக்கழகம்.....

அழிந்து வரும்
பட்டியலில்
இதுவும் ஒன்று....

மனிதனும்
மிருகங்களும்
பேசிக்கொள்ளும்
ஓசையற்ற மொழி....

தியானம்
தவம் இவை
இரண்டையும் விட
இறைவன்
இருக்கும் இடத்திற்கு
விரைவாக
அழைத்துச் செல்லும்
அற்புதமான வழி....!!!

*கவிதை ரசிகன் குமரேசன்*

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Jul-22, 9:52 pm)
பார்வை : 135

மேலே