காலை எழுந்தவுடன் காஃபி
காலை எழுந்தவுடன் காஃபி.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தொலைதூர ஆற்றங்கரையில்
ஆநிரை மேய்த்துப் பால் கொடுத்த ஆயர்கள் ;
மலைமுகட்டைச் சீராக்கித்
தேயிலை காஃபியை
வளர்த்தெடுத்து வழங்கிய
குறிஞ்சிப் புதல்வர்கள் ;
மருதச் செழிப்பில்
கன்னல் இனிப்பினைக் கண்டெடுத்த
உழவர்கள்;
ஆழ்துளையிட்டுப் பூமியை உறிஞ்சி
நன்னீர் தந்த ஆளுமைகள் ;
யாவையும் ஒருங்கே ஓரிடம் சேர்த்த
வணிகர்கள் ;
யாரையும் எண்ணிட நேரமில்லாது
காலைக் காஃபியில் திளைக்கிறேன்
நானே !!
-யாதுமறியான்.