அவ-மானம்

ராக்கம்மாக்கு வியர்த்து விறுவிறுத்து போனது.அந்த போலீஸ் அதிகாரி அவளை விரட்டி அந்த இரயில் காம்பர்மன்ட்க்குள் வந்து தேடி அலசிய போது.அப்படியென்ன அவள் குற்றம் செஞ்சா வயித்து பொழப்புக்காக பழத்தை தானே விக்கிறா.பெரிய பெரிய கஞ்சா கடத்தறவங்கள எல்லாரையும் லேசுல விட்டுட்டு இப்படி வயித்த கத்தி கூவி கூவி வெயிலுல மெழுகா உருகி போற அவர்களிடம்  போய் உங்க அதிகாரத்த காட்டுறது.அவளை நெருங்கி வந்தபடியே அந்த அதிகாரி அசிங்கமாக திட்டிய படி அவளை கீழே இறங்க வற்புறுத்தினார்.அவள் அழாத குறையாக கெஞ்சினாள்.மொத்த ஜனங்கள் கண்களும் மொய்க்க புழுவென நெளிந்து போனாள்.அதிகாரி அவளை விடுவதாக இல்லை அவள் தலைமுடியை பிடித்து இழுத்தபடி கீழே இறக்கினார்.இரண்டொருவர் அவள் கூடையை அவளிடம் கொடுத்தபோது எட்டி உதைத்துபடி ஏதோ ஆபாசமாக மீண்டும் திட்டத்தொடங்கினார்.அழுகையை மீறி ராக்கம்மாவுக்கு அடிவயிறு கிள்ளத்தொடங்கியது.நேத்து சாயங்காலம் சாப்பிட்டது விடிஞ்சதும் கூடைய தூக்கிட்டு போயி மார்கெட்ல பழத்தை வாங்கி வந்து முடிஞ்சும் முடியாம தூக்கிட்டு வந்து நாய் மாதிரி இரயில் பெட்டியில ஓடி ஓடி தொண்ட வறண்ட போக கத்தி கத்தி மூச்சு வாங்க காசு சம்பாதிச்சு கால் வயித்த தானே அவளால் ஆத்த முடியுது.

போன வாட்டி இதே அதிகாரி தான் பழத்தை வாங்கிட்டு காசு கேட்டப்ப கன்னத்துல அறைஞ்சான். ரெயில் கிளம்பறப்ப அவன் மேல இருந்த கோபத்துல ஒரு பழத்த அவன் மீது எறிஞ்சித மனசில வச்சிட்டு இப்படி அவன் பழிவாங்குறான்

அந்த அதிகாரி அவளை அங்கேயே வைத்து எட்டி உதைத்ததோடு அவள் மீது எச்சில் துப்பினான்.அவள் மார்பிலிருந்து ஈரம் ஊறிய பர்சிலிருந்த பணம் மொத்தத்தையும் நீட்டியபடி அழுதாள்

அவன் சிரித்தபடியே எதையோ சொல்லி இனி நீ ஜெயில்ல களி தின்ன போற பாரு என கூறியபடி யாரையோ போனில் அழைத்தான்

அதற்குள் ராக்கம்மா எகிறி போய் வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் இரயிலின் முன்னால் விழுந்தாள்

நடைபாதையில் சிலர் சிதறிய ராக்கம்மா வின் பழங்களை மிதித்த படியே சென்றுக்கொண்டிருந்தனர்...

எழுதியவர் : S. Ra (24-Jul-22, 10:35 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 219

மேலே