உமி குமி
ஏன்டா இரட்டைப் பசங்களா, உங்க இரண்டு பேரோட பேருங்களையும் சொல்லுங்கடா.
எம் பேரு உமி (Umi).
எம் பேரு குமி (Kumi).
என்ன பேருங்கடா உமி, குமி.
உமி எகிப்து மொழிப் பேரு. குமி ஜப்பானிய மொழிப் பேரு.
என்னங்கடா தமிழருங்க இந்திப் பேருங்கள வைக்கிறதுதானே வழக்கம். உங்க இரண்டு பேருக்கும் என்னடா எகிப்து பேரையும் ஜப்பானியப் பேரையும் வச்சிருக்காங்க?
தமிழர்களுக்கு இந்தியும் தெரியாது எகிப்து மொழி, ஜப்பானிய மொழியும் தெரியாது. தமிழ்ப் பேருங்கள மட்டும் குழந்தைகளுக்கு வைக்கக் கூடாது. இதுதானே தமிழர்களின் பெயராசை. எந்த மொழிப் பேருங்களா இருந்தா என்னங்க தாத்தா.
நீங்க சொல்லறதும் சரிதான்டா பசங்களா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@