என்னென்ன நான் சொல்ல..
மயிலும் அல்ல
மானும் அல்ல
மாங்குயில் அவள்..
பூமல்ல
பொழுதும் அல்ல
புது நிலவு அவள்..
நதியமல்ல
கடலும் அல்ல
அழகிய அருவியவள்..
எழுதுகோலும் அல்ல
காகிதமும் அல்ல
வார்த்தைகள் அவள்..
பாலும் அல்ல
தேனும் அல்ல
தேவதையை அவள்..
இன்னும் இன்னும்
நான் என்னென்ன
சொல்ல அவள் அழகை..