அனர்க்க நிமிஷங்கள்

அனர்க்க நிமிஷங்கள்
====================

எல்லாமே இழந்துட்டேன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்

எனக்கு இதெதுவும் உன்கிட்ட கேக்கத் தெரியாது
""இங்கே எனக்குள் ஏற்படும் அழுத்தம்
அங்கும் ஏற்படுமா
இங்கு உன்னால் நான் சுவாசம் முட்டி சாகிறேன்
அதுப்போல
அங்கும் சுவாசம் முட்டுமா "
இப்படியெல்லாம் உன்னிடம் எனக்கு கேக்கத் தெரியாது
கொஞ்சம் அனுமதித்தால்
உனக்கு பிடித்தது மாதிரியோ
இல்லை நீ கடுப்பாகி போறமாதிரியோ
உன் துடிப்பாகி நின்று
சற்று வேகம் கூடுவேன் அவ்வளவே

நீ சுத்தமா மறந்துட்ட
நிகழ்வொன்றை
உனக்கு நினைவுப்படுத்தட்டுமா ம்ம் ??

அந்த பிரிதலுக்குப் பின்னால்
வேண்டாமென்று புறக்கணித்துவிட்ட அனைத்தையும்
திரும்ப எடுத்துப் பார்க்கிறேன்
இதுவரை
நமக்கிடையே ஏதும் நேராததுபோல
இதையெல்லாம்
உனக்கு திருப்பிக்கொடுப்பதைப்போல
உன்னிடம் வந்து
மீண்டும் ஒரு புத்துறவு ஏற்படுத்திக் கொள்ளலாமா என்று
சில காரணங்களை யோசிக்கிறேன்

அதற்குப் பிறகான
உன் உன் ஒவ்வொரு பேச்சு நகர்விலும்
எதுவும் தூரம் போய்விடவில்லை என்பதைப்போல
ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லி
தள்ளித் தள்ளியே நிற்கிறாய்

கோபத்தின் போதெல்லாம்
என்னைப்பிடிக்குமா என்ற கேள்விதான்
யாரைப்பிடிக்கிறது
என்பதாக இருந்திருக்கிறதுபோல்

என் பரப்பில், ஏதுமற்றும் நிலா பொழிகிறது
நீ எனக்குள்,
நாடி ஓட்டம் போல ஓடிக்கொண்டிருக்கிறாய்
பாடிக்கொண்டும்
ஓவியம் வரைந்து கொண்டும்
சிற்பம் செதுக்கியும்
இப்படி நகர்ந்திருக்கலாம் தான்,,,
இவைகளுடைய
இடைவெளியின் தொடக்கம்
எனக்காக,
ஏதோ இருப்பதாக
யாரோ இருப்பதாக அதுவழியே சொல்லிப்போயிற்று
அந்த இடைவெளியினூடே
வெகுதூரம் விரைந்துவிட்டேன்,
திரும்பிப்பார்க்கும் போது
நடந்து முடிந்தவை சொல்லிப்போயிற்று
விருப்பங்களின் காலாவதி,
யாருக்கும் தொலைவிலில்லை என்று,,
துவங்கியபோதே
அந்த எதுவும்
சொல்லப்படாதவைகளாக இருந்திருக்கலாம் போல்
அந்த பரிமாற்ற
மோதல்களுக்கிடையே
ஒரு தடுப்பு சுவர் இருந்திருக்கலாம் போல்
கனம் அனுபவிக்கும்
அனர்க்க நிமிஷங்களுக்குள் தான்
அதிக அந்தஸ்தும் மரியாதையும் இருந்திருக்கலாம் போல

வலி பழக்கப்பட்டது
என்று சொல்லும் யாரையும்
நம்புவதாக இல்லை
வயது நகரும் ஒவ்வொரு நிலையிலும்,
இது, இந்த வாசனை,
சற்றுமுன் தான் பிறந்த கிளர்ச்சியோ என்று
நினைக்கும் முன்னமே
அந்த சந்திப்புப் பிரிவுகளை
அகங்காரமாய் சிராய்த்துவிட்டுப்போகும்
"இந்த வலி"
மேலும் மேலும்
எங்கோ சேர்த்துவைக்க இடம் தேடும்
ஒரு கூட்டுச்சேர்க்கை தான்

இன்றும்
மறுக்கமுடியாத ஒரு மெல்லிய வலி
இழையோடிக்கொண்டுதான்
இருக்கிறது
ஒவ்வொரு துருதுருப்பின்
கேலிகளின்
புன்னகைகளின்
உபதேசங்களுக்குப் பின்னால்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : பூக்காரன்‌ கவிதைகள் (6-Aug-22, 11:06 pm)
பார்வை : 82

மேலே