இயற்கையில் ஈசன்

பச்சைமா மலையாய் உன்திருமேனி
கொச்சையாம் குழந்தை மழலையாய் நீ
இச்சையாய் தன் இச்சையில் இசைக்கும்
சோலைக்குயில் ஓசையில் ஒலிக்கும்நீ
ஓடும் நதியின் ஓட்டத்தில் நீ
ஆடும் தோகை மயில் நடனத்தில் நீ
பூமலர் பூத்துக் குலுங்கும் புல்வெளியாய்நீ
நீலக் கடல் ஆர்க்கும் ஓம்காரம்நீ
நீல ஆகாயம் நீதான்
எமக்கு என்றும் ஒளிதரும் சூரிய
சந்திரரும் மற்றும் விண்மீன்களெல்லாம்நீ
கற்சிலையாய் கோயிலில் காட்சிதருகிறாய்நீ
கண்மூடினால் நிஷ்டையில் காட்சி உன்திருமேனி
குழலூதும் கடல்மேனி வண்ணனாய் நீ
என்காதில் வந்து இசைக்குதே உன்குழலோசை
அண்டமெல்லாம் உன்காலடியில் சேர்க்கும்

கண்ணா கண்ணா மணிவண்ணா
கண்ணில் தோன்றும் காட்சியெல்லாம்
நீயே கண்ணா எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Aug-22, 12:44 pm)
Tanglish : iyarkkaiyil eesan
பார்வை : 50

மேலே