நிலாவுக்கு வாழ்த்துப் பாடல்

குழந்தைப் பருவத்தில் தாயின் மடியில்
அமர்ந்து முற்றத்திலிருந்து உனைப்பார்த்து
'நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா'
என்று பாடி உன்னை அழைத்தேன்
பிள்ளைப்பருவத்தில் உனைப்பார்த்து
பிள்ளை நிலாவே என்னோடு ஓடி
விளையாடிடலாம் இறங்கி வருவாயா
என்று பாடி அழைத்தேன் ஞாபகத்தில்
இன்றும் அப்படியே இருக்கிறது மறவாது
காதலனாய் காதலியோடு நதியில் படகில்
மிதந்து பாடி வரும்போது வெள்ளி நிலவாய்
எம்மீது நீ வீசி வானில் வலம் வரும்போது
கண்டு மகிழ்ந்து இரவின் இருளைப்போக்கி
எமக்கு இரவில் ஒளியாய் நின்றாய் நிலவே
என்று உனக்கு நன்றிப் பாடல் பாடியது
இன்றும் மறவாது இருக்கிறது என்மனதில்
நேற்றுவரை நிலவே உன்னை என் பேரனுக்கும்
காட்டி பாட சொல்லி ஆடி மகிழ்ந்தேன்
உன்னையே காட்டி தாலாட்டும் பாடி
அவனை தூங்க வைத்தேன் நிலவே

இன்றுநான் வயதில் முதிர்ந்து உடல் தளர்ந்து
மூப்பில் இருந்தாலும் நிலவே உன்னை
நான் மறக்கவில்லை என் கவிதையில்
என்றும் உன்னைப் பாட மறக்கவில்லை

என்னைப்போல் அல்லாது என்றும் நீங்கா
இளமையில் வானில் நித்தம் உலாவி
வரும் உன்னைக் கண்டு நீங்கா
மகிழ்ச்சியில் கவிஞன் நான்
உன்னை பல்லாண்டு பல்லாண்டு
இப்படியே இன்ப நிலாவரை உலாவி வர
வாழ்த்துகின்றேன் கவிஞன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-22, 1:11 pm)
பார்வை : 68

மேலே