இனிய காலைப்பொழுது
இளங்காலைப் பொழுதினில்
இனிய சோலைக்குயில் கூவிட
கண் விழுத்துக் கொண்டேன்நான்
என்நெஞ்சில் இன்று முதல்
தூய எண்ணங்களே அங்கு
ஆதவன் ஒளிபோல் உதித்து
நெஞ்சில் இருளாய்ப் படிந்து
கிடக்கும் வேண்டா எண்ணங்கள்
அத்தனையும் இமைப்பொழுதில்
மறைந்து அங்கு தூய எண்ணங்கள்
அலைபோல் வந்து சேர்ந்திட வேண்டும்
இறைவா அதில் உன்பாதங்களை
நான் நித்தன் இனி மனதில் ஏற்று
நிஷ்டையில் உன்னை இக்கருத்தில்
வைத்து என்றும் எப்போதும் அதே
நினைவில் வாழ்ந்திட வேண்டும் இறைவா
வாழ்வின் மாயம் உணர்ந்து இனி
வாழ்வின் பயன் உணர்ந்து உந்தன்
பாதமே கதி என்று வாழ்ந்திட வேண்டும்
அருள் புரிவாயா னைக்கடலே இறைவா
இன்றுமுதல் என்றும் இளங்காலைப்
பொழுதினிலே இனிய சோலைக்கு குயில்
துயில் எழுப்ப நான் எழுந்திடல் வேண்டும்
இறைவா உன்னை துதிப்பாடி உன்
நினைவு மறவாது என் கடமைகள்
எல்லாம் இனிதே புரிந்து நல்லோர்
வாக்கில் என்றும் வாழ்ந்திடல் வேண்டும்
இதுவே இறைவா எந்தன் துதி