உழுதுண்டு வாழ்வாரே
தடம் பதிக்கும் முன் வணங்கி இறங்கி
ஏர் கொண்டு மென் தரை செய்து
கரம் கொண்டு விதைகளை தூவி
நிலம் குளிர நீரினை இறைத்து
துளிர் விட்ட நாற்றின் இடர் நீக்க
களை என்னும் கொடியோனை நீக்கி
தான் விதைத்த கதிர் அனைத்தும்
தலை சாய்த்து இசைக்கும் மொழியை
செவிகொண்டு கூர்ந்து கேட்ட வண்ணம்
அறுவடை நாள் நோக்கி..
நிலம் மீது நிழல் படர
நாள் பார்த்து ஏங்கி நிற்கும்
உழவனும் ஓர் அன்னையே..