இயற்கை
உதய சூரியன் தன் கிரணங்களால்
தாமரை மொட்டை அணைத்து துயில்
எழுப்பியது குயில் கூவி உதயராகம் பாட
வெட்கத்தில் கொஞ்சம் சிணுங்கிய தாமரைப்
பின் முழுமகிழ்ச்சியில் இதழ்கள் மலர
இதைக் கண்டு வெதும்பியது கொஞ்சம்
பக்கத்தில் சோலையில் பூத்த சூரியகாந்தி !