இதயம்

இதயத்தின் எங்கோ
ஒரு ஓரத்தில்
கேட்கும் ஒலி -
அது காதலோ!
இதயத்தின் எங்கோ
ஒரு ஓரத்தில்
உண்டான வலி-
அது காதலோ!
வந்தாய்!
இதயத்தில் இதமான
தென்றலாய்!
சென்றாய்!
இதயத்தை வெட்டிய
மின்னலாய்!
உள் வாங்கும் சுவாசமாய்
என் இதயத்தில்
நீ வந்தாய்.
வெளியேறும் சுவாசமாய்
என் இதயத்தை
நான் தொலைத்தேன்.
ஆக்ஸிஜன் இல்லையென்றால்
இதயம் துடிக்காது.
ஆனால்......!
உன் இதயம் இல்லையென்றால்
என் ஆக்ஸிஜனே துடிக்கிறதடி!!