ஆனந்த சுதந்திரம்

" 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம் இன்று மலர்ந்து விட்டது,
எல்லார் மனதிற்கு மகிழ்ச்சியை அள்ளி, அள்ளி தந்து விட்டது,


ஆனால் அந்த சுதந்திரம் எப்படி வந்தது ?
எந்த மந்திரமும் இல்ல, தந்திரமும் இல்ல,

மூச்சு விடும் எந்திரமுனு நம்ம நினைச்ச,
அன்னியரையே வியக்க வச்ச,

ஒற்றை சொல் அந்த 'வந்தே மாதரம்'
அதை மனசெல்லாம் ஏத்தி,
'அகிம்சை' எனும் விசித்திர
ஆயுதத்தால மனுஷங்கள மாத்தி,

கண்ணீரும், செந்நீரும் பரவி ஓட,
தண்ணீர், ஆகாரம், இல்லாமல் வாட,

சுயநலம் இல்லாத 'வீரம்' தந்த சுதந்திரம்!
உயிரையும் பெரிதாக நினைக்காத 'மனத்தீரம்' தந்த சுதந்திரம்!

அதுவே நம் நாட்டிற்கே உண்டான
தனிச்சிறப்பு,
உலகமே வியந்து பாரக்கும் நம்
பண்பாட்டு சிறப்பு,

இங்கு அனைவருமே அன்பு உடன்பிறப்பு,
எங்கும்,எதிலும் சுறுசுறுப்பு,
புதிது புதிதாய் தேடும் பரபரப்பு,
அதை அறிந்து கொள்ள எப்போதும்
ஒரு துருதுருப்பு ,

வாழும் வகையில் விறுவிறுப்பு,
வாளா இருந்தால் கடுகடுப்பு,
வேற்றுமை கண்டால் சிடுசிடுப்பு,
ஒற்றுமை காக்க பதைபதைப்பு,

இங்கு பிறப்பதே பெரும் சிறப்பு,
உணர்ந்து அதை காப்பதே
ஒவ்வொரு இந்தியரின் பொறுப்பு

அப்படிப்பட்ட உன்னதமான
இந்நாட்டின் சுதந்திரம் நம் உரிமை,
அதை அடைந்து விட்டோம் !

அயராது அதன் வளர்ச்சியை, வருங்காலத்தை காப்பதும்,
நம் கடமை,
அதையும் புரிஞ்சிக்கிட்டோம்.

சமூக, பொருளாதார சுதந்திரம் , தார்மீக, தன்மான சுதந்திரம், பெண்இன சுதந்திரம், இன்னும், இன்னும் பற்பல சுதந்திரம் பெற வேண்டி உள்ளது.

அவற்றையும் பெற ஒன்றாக உழைப்போம்!
அந்த கடமைகளை நன்றாக செய்து முடிப்போம்!
நல்ல குடிமக்களாய் நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்!"

"வாழ்க சுதந்திரம்,
வளர்க பாரத மணித்திரு நாடு".

--------------

எழுதியவர் : (14-Aug-22, 6:45 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 195

மேலே