சிந்தனைக் கவிதைகள்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*சிந்தனைக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


இதுவரை....
சிலிண்டர் வெடித்து
இறந்தார்கள் என்று
செய்தி வந்தது.....
இனிமேல்
செய்திகள் வரும்....
சிலிண்டர்
விலையைக் கேட்டு
இதயம் வெடித்து
செத்தார்கள் என்று.....!!!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இயேசுவை
சிலுவையில் அறைந்த
அந்த நான்கு பேர்
பாவிகள் தான்.....
ஆனால்
அதைவிட
மகா பாவிகள் பலர்
இன்று உள்ளனர்...
சிலுவையில் அறைந்த
இயேசுவை
அப்படியே அல்லவா
தேவாலயங்களில் வைத்து
அனுதாபங்களை
தேடிக் கொண்டிருக்கிறார்கள்....?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காந்தியடிகள்
ஆங்கிலேயர்களிடமிருந்து
சுதந்திரத்தை வாங்கி.....
நாட்டு மக்களின்
கைகளில் கொடுக்காமல்....
அரசியல்வாதி
பணக்காரர்களின்
கைகளில் மட்டும்
கொடுத்துவிட்டார் என்ற
கோபத்தினால் தான்
கோட்சோ
காந்தியை சுட்டானோ....?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

விவேகானந்தரே
வீதியில் சென்றாலும் .....
மதியை மீறி
மனம்
சஞ்சலப்பட்டுவிடும்...
ஒதுங்கி செல்லும்
பெண்கள்
உடுத்தியிருக்கும்
உடைகளால்.....!!!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கம்பராமாயணத்தில்
கலகத்தை உண்டாக்கிய
சங்ககாலக் கூனி
இந்தக் கம்ப்யூட்டர்
காலத்திலும்
இருக்கிறாள்.....
ஆனால் என்ன ?
கூன் மட்டும் இல்லை...

*கவிதை ரசிகன் குமரேசன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (13-Aug-22, 8:50 pm)
பார்வை : 36

மேலே