இறைவா அருள்செய் பாரதி

வெண்டளை விருத்தம்


சந்ததி வாழும் - வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே -- இங்கொர்
ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேணுன்றன்
கந்த மலர்த்தாள் -- துணை
காதல் மகவு வளர்ந்திட வேண்டு மென்
சிந்தை யறிந்தே -- அருள்
செய்திட வேண்டுமென் றாளரு லெய்திடும்



........

எழுதியவர் : மகாகவி பாரதியார் (18-Aug-22, 11:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே