கண்ணீரில் கரையும் என் காதல் 555

***கண்ணீரில் கரையும் என் காதல் 555 ***


உயிரானவளே...


உன் முதல் பார்வையிலே
என்னை அபகரித்துவிட்டாய்...

நானும் உன் இதய
கோட்டையை முற்றுகையிட்டு...

என் நேசத்தை
உனக்குள் செலுத்தினேன்...

உன்னிடம் நான்
முதல் முறை உணர்ந்
தேன்...

சொர்க்கம்
என்றால் என்னவென்று...

உன் மடியில் நான்
தலைசாய்த்த அந்த நிமிடம்...

என்னை
விலகி செல்
லும்...

உன் இதயத்தை
துரத்திவர என்னமில்லை...

நான் சுவாசிக்கும் மூச்சுக்கூட
எனக்கு சொந்தமில்லை...

இயற்கையிடம்
கடன் கேட்டேன் காற்றை...

உன்னிடம் நான் கடன்

கேட்கவில்லை உன் இதயத்தை...

நீ வாங்கிய
என் இதயத்தை மட்டும்...

திருப்பி கொ
டு
எனக்கு அது போதும்...

உன்னோடு சேர்ந்து நான்
ரசித்த இயற்கை எல்லாம்...

இன்று என்
கண்ணை உறுத்துகிறது...

காட்சிகள் கரைந்து
கண்ணீராக வெளியேறுகிறது...

என்
இதயம் போலவே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (29-Aug-22, 9:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 478

மேலே