பூதாச்சிறையன் என்னும் பச்சைக்கற்பூரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பூதாச் சிறையனெனும் பூரமஞ்சள் கைப்பாகுங்
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னுந் தனித்தோஷம் ஏறு(ம்)முத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்

- பதார்த்த குண சிந்தாமணி

மஞ்சள் நிறமும் கசப்புச் சுவையுமுள்ள இக்கற்பூரம் காசம், மேகம், வாத, பித்த, கபதோடங்கள், நமை, புண் இவற்றை நீக்கும்; பெண்களுக்கான மருந்திற்குப் பயன்படும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Aug-22, 11:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே