கலை மகள்

மண்ணின் பெருமை குரியவளே தமிழ் பெண்ணே! உன்னை போல் உலகில் வேறு தன் மொழியாள் ஏங்கேனும் உண்டா?
இலக்கியம் நயம் கொண்டவளே! காலத்தின் அழியா செல்வம் நீயல்லவா!
அமிழ்தம் இன்சுவை தான் எவளிடத்தில் அமைந்திருக்கும்? உன் பெருமை உலகமெங்கும் கமழ்கின்ற நிலையினும் தன்னடக்கம் காட்டுகின்றய்: இன்பத்தை ஊட்டுகிறாய் இமிழ் கடல் மண் இவ்வுலகில் தோன்றும் முன்னே என் உயிரே! நீ தோன்றி வளர்ந்தாய்!
மொழிகளின் மூத்தவள் நீ
இலக்கியதின் அமிழ்தமாய் இவ்வுலகில் அமிழ்தமாய் திகழ்ந்து இலக்கணத்தில் உயிர் படைத்து வளர்வதால் குறைதல் இன்றி பெற்றுள்ள செல்வவளர்த்தால்- கொஞ்சுதல் போல் மொழி என்றென்றும் தாழ்ந்தலின்றி முற்றும் நீ தனித்திங்கி வாழ்வதற்கு உன்னால் முடிவதனால் சீரிளமை கன்னியானால்.

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (4-Sep-22, 9:56 pm)
பார்வை : 171

மேலே