திக்கற்று நின்றவனை திரும்பிப் பார்த்தவளே

சொக்கத் தங்கமே சொர்க்கத்து ஊர்வசியே
திக்கற்று நின்றவனை திரும்பிப் பார்த்தவளே
வெக்கமில்லை காதலுக்கு ஆதலால் தானேஇந்த
மக்குப் பிளாஸ்திரி யிடமும்உனக்கு காதல் !


---காதல் கண்மூடித்தனமானது --LOVE IS BLIND
வெளிநாட்டான் தத்துவம்
-----------------------------------------------------------------------------------------------------------
யாப்பு விழைவோருக்கு :

எதுகை கருதி வெட்கம் வெக்கமானது
பாவினம் காதல் விருத்தம் இல்லை கலிவிருத்தம் என்று
நீவீர் அறிவீர்
தானேஇந்த , யிடமும்உனக்கு , நாலசைச் சீர்கள்
அமைத்துப் பொதுவாக புனைவதில்லை
பாவினத்திற்கு தளைவிதிகள் இல்லை என்பதால்
அனுமதிக்கிறேன்

வெக்கமில்லை காதலுக்கு ஆதலால் தானிந்த
மக்குப் பிளாஸ்திரி யிடமும்உனக் குக்காதல்
----என்றும் அமைக்கலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-22, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே