தமிழும் காதலும்..!!

குயில்கள் வட்டமிடும்
வண்ணப் பூஞ்சொல்லையடி
உந்தன் கூந்தல்..!!

அழகுகள் மிகுந்த
வானில் ஒளி வீசும்
உந்தன் விழிகள்..!!

உன் மூச்சுக்காற்று கூட என் காதுகளில்
வெப்பத்தை கூட்டும்
அளவை நான் உணர்வேன்..!!

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
குழந்தைத்தனம் தானடி..!!

வாழைத்தண்டு போல
வழவழப்பு தருவதெல்லாம்
உன் கழுத்துதா..!!

இறங்கிப் போனால்
தான் தெரிகிறது
இதயத்துக்குள் பல
எண்ணங்கள் ஓடுகிறது என்று..!!

இடுப்பைக் கண்டு
இடிந்தே போனவன்
இன்று இடைவிடாமல்
ரசிக்கிறேன் உன்
இடை பாகங்களை..!!

மூவேந்தருக்கும் மூச்சுமுட்டுதடி
உன் முந்தானையை கண்டு..!!

கவிதை முடிக்காமல்
தான் போகிறேன் நானும்
இருக்கட்டும் பிறகு
பார்த்துக் கொள்கிறேன்..!!

என் கவிதையின் நாயகி
என் கவிதையின் நாயகியை
மனம் முடித்து மொத்தமும்
கொண்டாட நினைக்கிறேன்..!!

எழுதியவர் : (5-Sep-22, 10:17 am)
பார்வை : 39

மேலே