என்னிதயப் பொன்னி நதியானாய்
புன்னகைச் செல்வி யானாய் பூக்களின் தலைவி யானாய்
மின்னல் விழிகளா னாய்நீ அதில்கா தல்மொழி பேசினாய்
பொன்னி நதியலை யைப்பூங் கூந்தலில் பாய்ந்திட அனுமதித்தாய்
அன்பலை பாய்ந்திடும் நெஞ்சால் என்னிதயப் பொன்னி நதியானாய் !