எமலோகம் ஆளவே சென்றார் இரண்டாம் எலிசபத்
நிலைமண்டில ஆசிரியப்பா
உலகின் கிழக்கை மேற்கை வென்று
ஆட்சியால் எவரையும் பணியச் செய்து
நன்மைத் தீமை திருட்டு கொள்ளை
என்றே பயமுறுத்தி ஆண்டத் தாயே
ஆயிரத் தெண்ணூ றாமாண் டிலேயே
ஆறு கோடி மக்களுள் தலைவியாய்
இருந்து முப்பது கோடி மக்களை
பயவசி யத்தால் ஆண்டாய் நீயே
வியாபரம் நடத்திட உதவிக் கேட்டே
இந்தியா வந்த கூட்டம் பின்னே
அரசினை அமைத்து இங்கிருந் தோரையே
வைத்து கொன்று ஆண்டதே பெருமை
மேற்கு நாடுகள் பிரச்சனை யிலேயே
இந்திய நாட்டில் இடத்தினை கைமாற்றி
அமைதியைக் கண்டே இங்கு கலவரம்
செய்திட ஒப்புக் கொண்டத் தாயே
இங்கு உம்பணி முடித்து எமலோகம்
சென்றே இப்பணித் தொடர முயலும்
உம்மின் பிரிவை பெருமையாய் துதித்து
அமைதியாய் வணங்கி வழிபடு கிறோமே.
---- நன்னாடன்.