மௌனமாய் திரும்பும் உன் மனப்புத்தகத்தில்
வானமெனும் நீலப்புத்தகத்தில்
வானவில் ஒரு கவிதை
நீலமாய் விரிந்திடும்
உன் விழிப்புத்தகத்தில்
காதல் ஒரு கவிதை
மௌனமாய் திரும்பும்
உன் மனப்புத்தகத்தில்
நீ மீண்டும் மீண்டும்
ரசிப்பதும் அந்தக் காதல் கவிதைதான் !