ஆயிரம் பேர் அண்ணே

அன்பா சொல்லி பாத்தேன் திருந்தல
அடக்கிப் பாத்துப்புட்டேன் அடங்கல
அடங்கியும் பாத்துப்புட்டேன் வெளங்கல
அடக்க வேற வழி தெரியல
தலையை பிச்சிக்கிட்டேன் முடியல
வாய மூடிக்கிட்டேன் முடிவுல
வீட்டுக்கொரு வாசப்படி தெரிஞ்சிகிட்டேன்
வீதிக்கொரு நியாயமதை புரிஞ்சிக்கிட்டேன்
இப்பத்தானே புரிஞ்சது வாழ்க்கைப்பாடம்
விடைகள் இல்லாத கேள்விகளை
தெனந்தெனம் எழுதித்தீர்த்தேன் தேர்வுகளை
முடிவுகாண ஓடிப்போய் வரிசையில் நின்னேன்
அட எனக்கு முன்னே ஆயிரம்பேர் அண்ணே...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Sep-22, 7:15 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 111

மேலே