காதல் மயக்கம்
உன்னிடம் மயங்கி
தயங்கி தயங்கி
என் காதலையும்
சொல்லிவிட்டேன்
உன்னை நினைத்து
உண்ணவில்லை
உறங்கவில்லையென்று
பொய் சொல்ல
விருப்பமில்லை
ஆனால்...
மதுயுண்ட வண்டாக
மயக்கத்தில் உள்ளேன்
என்பது மட்டும் உண்மை
உன் திருவாய் மலர்ந்து
சம்மதம் சொல்வாயென
காத்து காத்து
ஏக்கத்தோடு நிற்கிறேன்
என்பது மட்டும் நிதர்சனம்...!!
--கோவை சுபா