பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார் – நாலடியார் 295

இன்னிசை வெண்பா

பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று 295

- மானம், நாலடியார்

பொருளுரை:

மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப் பழியும் உண்டாகும்படி நேர்வன தாம் இறப்பதாயினும் சான்றோர் செய்யமாட்டார்:

ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒரு நேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும் பழியும் போல் என்றுந் துன்பத்துக் கேதுவான பெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை.

கருத்து:

மானமுடையோர், பழிபாவஞ்கட்கு அஞ்சி ஒழுகுவர்.

விளக்கம்:

ஏனையென்றார் மற்றொன்றாகிய வென்றற்கு. சாதலின் இன்னாதது இல்லை யாகலின்1 அவ்வின்னலின் உயர்வு தோன்றச் சாயினும் என்றார்.

அருநவை - தீர்தற்கரிய குற்றம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-22, 7:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே