என்னருகே நீ இருந்தால்

என்னருகே எனக்கு துணையாய் எப்போதும்
என்னருமைக் காதலியாய் கனிரசமாய்
அன்பு மனைவியாய் நீயிருந்தால் அதுவே
எனக்கு ஆயிரம் ஆயிரம் யானையின் பலம்
என்னுள் சேர்ப்பதை உணர்கின்றேன் நான்
சேர்த்து நமக்கும் பிறர்க்கும் என்றும்
நன்மையே தந்திடும் எண்ணங்கள் உருவாக்கி
செயல்படவும் வைக்கின்றது நல்லின்பங்கள்
மட்டுமே நாடவும் வைத்து என்னை
செய்யும் தொழிலெல்லாம் இறைவனைக் காணவைத்து
இறைவனுக்கு என்று அர்ப்பணம் செய்யவைத்து
உணன்பு பார்வை ஒன்றே போதுமடி கண்ணம்மா
என்னுள் அது பாய்ந்து தேங்கிக்கிடக்கும்
என்மன இருளெல்லாம் போக்கிடும்
தெய்வ ஒளி அதுவே -அதனால்
என்னருகே எனக்கு துணையாய் நீயிருந்தால்
எனக்கு அதுவே எனக்கு உயிர்மூச்சு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Sep-22, 10:39 am)
பார்வை : 399

மேலே