அவள் ஒரூ அசியம்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

பெண்ணே !!
நீ என்ன
செதுக்காத சிலையோ ?
துளியில்லாத மழையோ ?

எழுதாதக் கவிதையோ?
புனையாதக் கதையோ?

வாடாத மலரோ ?
தேயாத நிலவோ ?

மறையாத வானவில்லோ?
மாசற்ற தமிழ் சொல்லோ?

பறக்காத கிளியோ?
மங்காத ஔியோ?

கூவாதக் குயிலோ ?
பூச்சூடும் மயிலோ?

அழுகாத கனியோ ?
மறையாதப் பனியோ?

தீட்டாத வைரமோ ?
திகட்டாத தேனோ ?

மறையாத மின்னல் கீற்றோ?
நடவு செய்யாத நெல் நாற்றோ?

தீட்டாத சித்திரமோ?
தித்திக்கும் சமுத்திரமோ?

ஆடை அணிந்த அருவியோ?
கொழுசு போட்ட குருவியோ?

காணதா அதிசயமோ?
கடவுள் படைப்பின் புதுரகமோ?

குடம் தூக்கும் கோபுரமோ?
சாட்டையற்று சுழலும் பம்பரமோ?

புள்ளி இல்லாத மானோ?
துடுப்பில்லாத மீனோ ?

எது என்று தெரியவில்லை...
தெரிந்து விட்டால்
தேடல் இல்லை....!!!

*கவிதை ரசிகன் குமரேசன்*

💃💃💃💃💃💃💃💃💃💃💃

எழுதியவர் : கவிதை ரசிகன் (29-Sep-22, 8:20 pm)
பார்வை : 78

மேலே