இதழெனும் மௌனக் கதவினை

இமைக் கதவினை
மூடித் திறந்து
இதயக் கதவினை
மெல்லத் தட்டுகிறாய்

இதழெனும் மௌனக் கதவினை
மெல்லத் திறந்து
புன்னகைப் பூக்களை தூவுகிறாய்

காதலெனும் வசந்தத் தோட்டத்திற்கு
கையசைத்து
என்னை வரவேற்கிறாய் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-22, 8:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 121

மேலே