எமனுடன் ஒரு கேள்வி
எவன்டா அது
என் தூக்கத்தை கலைத்தது..?
"எமண்டா...நீதானே பரிதி.
வா என்னோடு உன் வாழ்வு காலம்
முடிந்து விட்டது."
"யோவ்... எமன் நான் ஒரு கவிஞன்ய்யா
எனக்கு மரணமே இல்லை..
உன் சித்திரகுப்தனிடம் கேட்டுப்பார்...
அவன் சொல்வான்
கவிஞர்களுக்கு மரணம் இல்லை" என்று
எந்த ஆண்டு பிறந்தார்? எந்த ஆண்டு இறந்தார்? என்று எதுவுமே தெரியாத
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த எங்கள் அய்யன் வள்ளுவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது தெரியாதா உனக்கு?
இன்னும் கம்பர்,இளங்கோ... போன்றவர்கள் மட்டுமல்ல சீத்தலை சாத்தனார் முன் மட்டும் சென்றுவிடாதே
எழுத்தானியால் உன் மண்டையை பிளந்து விடுவார்..
பாட்டுக்கொரு புலவன் பாரதியார், அவரது தாசன் பாவேந்தர்... இன்னும் பலர் வாழும் தமிழ் உலகமய்யா இது...
எந்த காலத்திலும் எனக்கு மரணமில்லை என்று பாடிய கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த பூமியய்யா இது...
"அடேய்...எழுந்திரிடா... விடிஞ்சி எம்புட்டு நேரமாகுது" என்ற குரல் கேட்டு எழுந்தேன்...
எதிரில் எமனும் இல்லை எவனும் இல்லை என் அன்னையை தவிர...
என் சிறுவயதில் செத்துப்போன என் தாய் எப்படி இன்று என்னை எழுப்புகிறாள்...? நான் எங்கே இருக்கிறேன்...?