நிலாவுடன் உனக்கென்ன தொடர்பு

தொலைவில் தெரியும் நிலாவுடன்
...உனக்கென்ன தொடர்பு
அலைபாயும் கூந்தல் அழகிய
...நீல விழிகள்
சிலைபோல் அசைந்து செவ்விதழ்
....திறந்தால் முத்துருளும்
விலையிலா முத்துப் புன்னகைக்கு
....இதோவோர் கவிதை


சீர் 5 அடி 4 இயைந்த முதற்சீர்
எதுகை ---கலித்துறை என்பர்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-22, 8:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 134

மேலே