நீலாஞ்சன பாஷாணம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சன்னிசுரம் மேகம் கயந்தாகம் நேத்திரநோய்
வன்னிரச வேகம் மறைவதன்றி - மன்னுடலம்
விஞ்சு குளிர்ச்சியொடு வீறழகு காந்தியுமாம்
அஞ்சனக் கல்லுக்(கு) அறி

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

வாரிறுக்கும் பூண்முலையாய் வாய்த்தநீ லாஞ்சனத்தால்
நீருறுத்துங் கண்ணோய் நிலைகெடுங்காண் - பாரினிலே
எல்லாச் சுரமும் இரத்தபித்த தோஷமுதற்
பொல்லா அறுபுண்ணும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் இரசவன்னி தோடம், வெட்டுப்புண், பிரமேகம், விழிப்புண், சன்னி, புழுவெட்டு, வறட்சி, உட்சூடு, இரத்த பித்தம் இவை நீங்கி உடல் அழகு, குளிர்ச்சி, பலம் இவை உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-22, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே