பஞ்ச பாஷாணம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பஞ்சபா ஷாணமெனப் பாரிலுரைத் திட்டாலும்
வெஞ்சதை ஆணிபுற்றும் வீழுங்காண் - விஞ்சிவளர்
கண்புற்றுத் தீருமதி காய்ச்ச(ல்)குளிர் மேகம்போம்
பண்புற்ற மாதே பகர்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் துர்மாமிசம், ஆணிப்புற்று, சதைப்புற்று, கண்சதைப் புற்று, மிகுசுரம், குளிர்மேகம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-22, 9:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே