நவ பாஷாணம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நவபாஷா ணந்தன்னை நற்சுத்தி செய்தங்
குவகையாய்ச் சிந்தூரித் துண்டால் - நவமாகக்
காயம் இறுகுங் கனத்தநோ யும்போகும்
மாயும்நோய் எல்லாம் மதி
- பதார்த்த குண சிந்தாமணி
சுத்தம் செய்த நவபாடாணத்தைச் செந்தூரம் செய்து உண்டால் உடல் பலம் பெறும்; மகாவாதமும், பல்வகைச் சுரங்களும் நீங்கும்