மௌன மொழியில் நீ பேசிட

நிலவு வரக் காத்திருந்தது
அல்லி
நிலவை நீர்மேகம்
மறைத்திருந்தது
மொட்டவிழா சோகத்தில்
அல்லி.......
சற்று சிரித்து
விழி அசைத்து
மெல்லிதழ் முறுவலித்து
மௌன மொழியில் ,நீ பேசிட
சட்டென்று மகிழ்ச்சியில் மலர்ந்து
நன்றி நவின்றது
அல்லி !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-22, 4:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே