தாமரைப்பூ

மலர்கள் எத்தனயோ எத்தனையோ
அலரும் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்
மல்லி முல்லை இருவாட்சி ரோசா
என்று அவை எத்தனயோ இருப்பினும்
தடாகத்தில் தனித்து தலைதூக்கி கம்பீரமாய்
பூத்து குலுங்கும் மெல்லிய இனிய
வாசம் பரப்பும் இந்த சிவப்பு
தாமரைக்கு இணை யுண்டோ
தரணியில் காணும் ஒருபூ
பூக்களின் ராணி தாமரை
அதனால் அல்லவோ திருமகள்
கரங்களில் நித்தியமாய் வாசம்
செய்யும் பூவாய் இருக்கின்றாள்
இலக்குமியின் அம்சமே இவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Oct-22, 2:32 pm)
பார்வை : 462

மேலே