திருவள்ளுவர் எண்சீர்விருத்தம் பஞ்சரத்தினம்
விந்துவிட்டால் நாதமது கிட்டா தென்றே
வேறுபல விதமாய் சொன்ன சித்தர
சிந்தைதனில் கற்பமுண்ணக் கலங்கு கின்றார்
தெளிவாக கூறாத குற்றத் தாலே
நொந்துகெட்டார் ஞாலமதில் மாந்தர் கோடி
நுட்பமது வின்னதென் றுமறி யவில்லை
சிந்தைதனில் பெண்மயக்கம் கொண்டா லன்றே
சிதறிப்போம் காயமுடன் யோக சித்தி