திருவிளையாடற் புராணம் - காப்பு - கலி விருத்தம்
நம் புராணங்களிலும், காப்பியங்களிலும் பலவகையான வாய்பாடுகளில் கலிவிருத்தப் பாடல்கள் உள்ளன. அதில் கீழேயுள்ள பாடல் தகுந்த இலக்கணத்துடன் தரப்பட்டிருக்கிறது.
இதை வாசிப்போர் குறிப்பெடுத்துப் புரிந்து கொண்டு ஒரு கலிவிருத்தம் எழுதினால் மகிழ்வேன்.
காப்பு
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே!