நூல் என்றால் யாதெனக் கேட்பின் என் சொல்வேன் தோழி

நூல் என்றால் ஆடை நெய்ய உதவும் கச்சாப் பொருளோ
நூல் என்றால் கோவை வீதிக் கடையில் விற்கும் கவிதைப் புத்தகமோ
நூல் என்றால் சேல்விழியால் மெல்லிடை இழைப் பொருளோ
பால்குடம் தாங்கி நடந்து நொந்த நூலிழை மென்பொருளோ
நூல் என்றால் யாதெனக் கேட்பின் என் சொல்வேன் தோழி !