அசையும் இதழ்களின் புன்னகை தன்னில்
வீசிடும் தென்றலில் நல்லிளவே னில்பூக்கும்
பேசும் மொழியினில் செந்தமிழ் சிந்தும்
அசையும் இதழ்களின் புன்னகை தன்னில்
இசைவீணை ராகம்பா டும்
வீசிடும் தென்றலில் நல்லிளவே னில்பூக்கும்
பேசும் மொழியில் தமிழ்சிந்தும் --பேசா
தசையும் இதழ்களின் புன்னகை தன்னில்
இசைவீணை ராகம்பா டும்
--பேசா தசையும் =பேசாது அசையும்