இந்துவை வென்றவளே செந்தமிழில் பாடினால் போதுமா
பாரதியின் நினைவில்
"சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்"
என்ற பாடலின் அழகினை ரசித்து இரு வடிவினில்
புனைந்த கவிதை
பாண்டிய நாட்டு முத்தினை பவள இதழ்களில் ஏந்தி
சோழனின் காவிரி அலைகள் கருங்கூந்தலில் தவழ
சேரத்து தந்த மேனியில் வெண்பட்டுச் சேலை அணிந்து
சிந்து நதியினில் தோணிகளோட்டி விளையாட வந்தாயோ
சுந்தரத் தெலுங்கு எனக்கு கொஞ்சமும் தெரியாதே
இந்துவை வென்றவளே செந்தமிழில் பாடினால் போதுமா ?
----------------------------------------------------------------------------------------------------------
யாப்பு எழிலில் :--
தந்தச்செம் மேனியில் வெண்பட்டு நற்சேலை
இந்து நிகர்த்தவுன் செவ்விதழில் வெண்முத்து
செந்தமிழ் காவிரி கூந்தல் தனில்தவழ
அந்தி அழகினில் பைந்தமிழில் பாட்டிசைத்து
சிந்து நதியினில் தோணிகள் ஓட்டுவோமா
சுந்தரத்தெ லுங்கறியேன் நான்